கொரோனாவால் ஒரே வாரத்தில் 13,000 பேர் உயிரிழப்பு!!

கொரோனாவால் ஒரே வாரத்தில் 13,000 பேர் உயிரிழப்பு!!
X

கொரோனா தொற்று காரணமாக சீனாவில் ஒரே வாரத்தில் 13,000 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு இந்த முறையும் மேற்கொண்ட போது மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

ஊரடங்கை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிந்த சீன அரசு ஊரடங்கை திரும்பப் பெற்றது. இந்நிலையில் தற்போது உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனைக்கு வராமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிகிறது.
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே 80 சதவீதம் பேருக்கு தொற்று பரவியதால், எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உயிரிழப்புகள் இனி குறையும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it