மனிதாபிமானம் எங்கே..!! உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 13 வயது சிறுமியை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்..!
நம் வீட்டு சின்ன குழந்தைகள் தெரியாமல் கீழே விழுந்தால் நாம பதறி போய் விடுவோம். ஆனால் இங்கே உடல் முழுவதும் படுகாயத்துடன் உதவிகே.ட்டு கதறும் சிறுமியை, அங்கு கூடி இருந்தவர்கள் பொருட்காட்சியை போல் பார்த்து, செல்போனில் வீடியோ எடுத்த அவலம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13-வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடி அலைந்தனர். இந்த நிலையில், அருகில் உள்ள திறந்த வெளி இடத்தில் பலத்த காயங்களுடன் அந்த சிறுமி ரத்த காயங்களுடன் அடிபட்டு கிடந்தது தெரியவந்தது.தலை உள்பட பல இடங்களில் ரத்தக் காயங்களுடன் அடிப்பட்டு உயிருக்கு போராடி வந்த சிறுமி உதவி அளிக்குமாறு குரல் கொடுக்கிறார். சிறுமி ஒருவர் அடிபட்டு கிடப்பதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். ஆனால் யாருமே சிறுமியை காப்பாற்ற முன்வரவில்லை.
அந்த சிறுமி கைநீட்டி அருகில் இருந்தவர்களிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார். ஆனால் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் அந்த கூட்டம் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடும் சிறுமியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை..
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.போலீசார் வந்து மீட்கும் வரை சிறுமி அதே இடத்தில் காயங்களுடன் வலியால் துடித்தபடி உயிருக்கு போராடியுள்ளார்.
மனிதாபிமானம் மரித்து விட்டதோ என்று எண்ணும் அளவிற்கு அரங்கேறியுள்ளது இந்த சம்பவம்...