மக்கள் அதிர்ச்சி..!!உத்தரகண்டில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்..!!
உத்தரகாசி மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிரோர் வனப்பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 2.5 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடர்ந்து மூன்றாவது நிலநடுக்கம் காலை 10.00 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக இருந்தது.
இதன் காரணமாக, வீடுகளில் கதவு, ஜன்னல்கள் அதிர்ந்தன. பாத்திரங்களும் கீழே விழுந்ததால், வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், பதறியடித்து எழுந்து, வெளியே ஓடிவந்தனர். பீதி காரணமாக மீண்டும் வீடுகளுக்குள் செல்லாமல் காலை வரை தெருக்களிலேயே தஞ்சமடைந்திருந்தனர். நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. உத்தரகண்டில் கடந்த இரண்டு மாதங்களில் 12 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.