1. Home
  2. தமிழ்நாடு

உதவி கேட்ட குடும்பத்தை பார்த்து ஆடிப்போன அரசாங்கம்... இவருக்கு 12 மனைவிகள்.. 102 குழந்தைகள்.. 568 பேரக்குழந்தைகளாம் ..!!

உதவி கேட்ட குடும்பத்தை பார்த்து ஆடிப்போன அரசாங்கம்... இவருக்கு 12 மனைவிகள்.. 102 குழந்தைகள்.. 568 பேரக்குழந்தைகளாம் ..!!

உகாண்டாவின் புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா (68). இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பின் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து அவர் தனது தொழிலை விரிவுபடுத்தி வருமானத்தை அதிகப்படுத்தியதால், அடுத்தடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் அடுத்தடுத்து 12 பெண்களை திருமணம் செய்து கொண்டார்.

இப்படியாக 12 திருமணங்களை செய்த மூசா, அவர்கள் மூலம் 102 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைகள் மூலமாக 568 பேரக்குழந்தைகளுக்கும் தாத்தா ஆனார். இதில் பலரின் பெயர்கள் கூட மூசாவிற்கு நினைவில் இல்லையாம். அந்த அளவிற்கு அவர் எதிர்பார்க்காத அளவிற்கு குடும்பம் பெரியதாக விரிவாகியுள்ளது.


உதவி கேட்ட குடும்பத்தை பார்த்து ஆடிப்போன அரசாங்கம்... இவருக்கு 12 மனைவிகள்.. 102 குழந்தைகள்.. 568 பேரக்குழந்தைகளாம் ..!!

12 மனைவிகளும் ஒரே வீட்டில் தான் வசித்துள்ளனர். அவருடைய மூத்த மகனுக்கும், தனது கடைசி மனைவிக்கும் ஒரே வயதாகிறது. இதனை அடுத்து அவர் அதிரடி முடிவு எடுத்து இனிமேலும் குழந்தை பெற்று கொள்ள வேண்டாம் என முடிவு செய்து தனது 12 மனைவிகளையும் கருத்தடை செய்ய வற்புறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இனிமேலும் குழந்தைகள் பெற்றால் அவர்களை காப்பாற்ற முடியாது என்றும் ஒரு மிகப்பெரிய சந்ததிக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அவரது 102 குழந்தைகள் மற்றும் 568 பேரக் குழந்தைகளின் பெயரை கூட தன்னால் முழுமையாக சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹசஹ்யாவின் 12 மனைவிகளில் ஒரு சிலர் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இரண்டு மனைவிகள் அருகில் உள்ள நகரத்தில் வசிக்கிறார்கள். அதேபோல ஒரு மனைவி பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார். இது குறித்து ஹசஹ்யாவிடம் கேட்டபோது, "சிலர் சென்றுவிட்டனர். ஆனால் பலர் என்னுடன்தான் இருக்கின்றனர். ஏனெனில் இங்கு மகிழ்ச்சி இருக்கிறது. எனவேதான் அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

கிராம தலைவர் மற்றும் தொழிலதிபராக இருந்தாலும் இவ்வளவு பெரிய குடும்பத்தை சமாளிக்க அவரால் சம்பாதிக்க முடியாததால் மனைவிகள் அனைவரையும் கருத்தடை செய்ய அவர் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது குழந்தைகள் அனைவரையும் படிக்க வைக்க அரசாங்கத்திடம் உதவி கேட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Trending News

Latest News

You May Like