1. Home
  2. தமிழ்நாடு

கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!!

கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!!

இலவச உணவுப்பொருட்கள் வாங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அதே நிலைக்கு செல்கிறது.

பாகிஸ்தானில் அத்தியாவசியப் பொருட்களான கோதுமை, அரிசி கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரமலான் மாதத்தை ஒட்டி கராச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவசமாக கோதுமை வழங்கியது.


கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலி!!

அதுகுறித்து அறிந்த மக்கள், ஒரே நேரத்தில் நூற்றக்கணக்கானோர் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட பலர் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலில் மயங்கியவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவு வாங்க சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 21 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like