1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கீடு!!

அதிர்ச்சி! மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கீடு!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு ரூ.12 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு, கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் 4 ஆண்டுகளைக் கடந்தும் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். மதுரையில் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.


அதிர்ச்சி! மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கீடு!!

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், மதுரை எய்ம்ஸூக்கு இதுவரை 12.35 கோடி ரூபாய் மட்டுமே நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

மதுரை எய்ம்ஸின் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு 1,977 கோடி ரூபாய். அதே நேரத்தில், நாக்பூர் எய்ம்ஸூக்கு 1,218 கோடி ரூபாயும், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் எய்ம்ஸூக்கு 874 கோடி ரூபாயும், குஜராத் மாநிலம் ராஜ்கோட் எய்ம்ஸூக்கு 622 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைளுக்கு கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸூக்கு மொத்த நிதியில் ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like