1. Home
  2. தமிழ்நாடு

அரசாணை எண் 115 ஆய்வு வரம்புகள் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு..!

அரசாணை எண் 115 ஆய்வு வரம்புகள் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு..!

அரசாணை எண் 115 குறித்த மனிதவள சீர்திருத்தக் குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும், அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனித வள சீர்திருத்தக் குழு கடந்த 18-ம் தேதி அரசாணை எண் 115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டது.


இந்நிலையில், தமிழக தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இன்று மனு அளித்தனர்.

அவர்களுடைய கோரிக்கையை கேட்டறிந்த முதல்வர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும். இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என உறுதி அளித்துள்ளார்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like