அதிர்ச்சி! நக்சலைட்டுகள் தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழப்பு!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்தனர்.
போலீஸார் ரோந்து பணியை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அரன்பூர் என்ற பகுதியில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். நக்சலைட்டுகள் வாகனத்தை நோக்கி ஐஇடி ரக குண்டை வீசி வெடிக்கச் செய்தனர்.
Also Read - #BREAKING : மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்..!
தாக்குதலில் 10 வீரர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் என 11 பேர் வீரமரணம் அடைந்தனர். 10 வீரர்களும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (DRG) பிரிவை சேர்ந்தவர்கள். நக்சலைட்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல், காவலர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், நக்ஸல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது, அவர்களை வேர அறுப்போம் என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, முதல்வர் பூபேஷ் பெகலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைப்பேசியில் பேசினார். அப்போது, மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.
தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
newstm.in