1. Home
  2. தமிழ்நாடு

கிரைண்டரில் துப்பட்டா சிக்கி இளம்பெண் உயிரிழப்பு!!

கிரைண்டரில் துப்பட்டா சிக்கி இளம்பெண் உயிரிழப்பு!!

மாவு அரைத்துக்கொண்டிருந்த போது கிரைண்டரில் துப்பட்டா சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே தலப்பாடி பகுதியை சேர்ந்த ரஞ்சன் என்பவருக்கும் ஜெயஷீலா (24) என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜெயஷீலா வீட்டிற்கு அருகே பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் புது சுடிதார் மற்றும் அதற்கேற்ப துப்பட்டா அணிந்து வேலைக்கு சென்றிருந்தார். அவர் கடையில் பெரிய கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது துப்பட்டா எதிர்ப்பாராத விதமாக கிரைண்டரில் சிக்கியது.


கிரைண்டரில் துப்பட்டா சிக்கி இளம்பெண் உயிரிழப்பு!!

நிலைகுலைந்துபோன கீழே விழுந்தார். அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, துப்பட்டா அணியும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பலரும் அறிவுறித்துகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like