லியோ படத்தில் இருந்து த்ரிஷா விலகலா? – புதிய விளக்கம்!!
லியோ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகிவிட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு நடிகையின் தாய் விளக்கம் அளித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அண்மையில் படக்குழுவினர் காஷ்மீர் புறப்பட்டு சென்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர்.
படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே உள்ளது. அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் உள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் த்ரிஷா விஜய்க்கும் ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை த்ரிஷா படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவியது. படக்குழு முழுவதும் காஷ்மீரில் இருக்கும் நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் சென்னைக்குத் திரும்பிய புகைப்படங்கள் வெளியானது.
இதனால் அவர் லியோ படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு நடிகை த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். லியோ படத்தின் பட பிடிப்பிற்காக த்ரிஷா காஷ்மீருக்கு சென்றுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் நடிக்கும் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருவதாகவும், த்ரிஷா 'லியோ' படத்தில் இருந்து விலகியதாகப் பரவும் செய்தி தவறானது என்றும் நடிகையின் தாய் விளக்கம் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
newstm.in