1. Home
  2. தமிழ்நாடு

எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும் ..!!

எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும் ..!!

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

புதிய வருமான வரி திட்டத்தின்படி ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை.மேலும் இந்த வரி வரம்பு புதிய வருமான வரி முறையை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே என்றும், 80சி பயன்படுத்தி வரி விலக்கு பெற்றால் இந்த வரி வரம்புகள் கீழ் விலக்கு பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி சலுகைகள் காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.38 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நேரடி வரிகளில் அளித்த சலுகை மூலம் ரூ.37,000 கோடியும் மறைமுக வரி சலுகையால் ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பழைய வருமான வரி திட்டத்தின் படி வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ 2.50 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

  • 3 லட்சம் வரை வருமான வரி இல்லை
  • 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5 சதவீத வருமான வரி
  • 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை 10 சதவீதம்.
  • 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்.
  • 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்.
  • 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வருமான வரி.

Trending News

Latest News

You May Like