1. Home
  2. வர்த்தகம்

மக்களுக்கு மேலும் ஒரு இடி..!! தங்கம் விலை சவரனுக்கு 42 ஆயிரத்தை தாண்டியது..!!

மக்களுக்கு மேலும் ஒரு இடி..!! தங்கம் விலை சவரனுக்கு 42 ஆயிரத்தை தாண்டியது..!!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து, 42,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்று காலை (09/01/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 39 ரூபாய் உயர்ந்து, 5,260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 42,080 ரூபாயாக உள்ளது.


வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 5,622 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.

தங்கம் விலை அதிகரித்து ஒரு சவரன் 42,080 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் 5260 ரூபாயாகவும் ஆக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 52,210 ரூபாயாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 56,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, 74.90 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,900 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like