1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வங்கியிலா, கையிலா..?: அமைச்சர் விளக்கம்..!

பொங்கல் பரிசு 1000 ரூபாய் வங்கியிலா, கையிலா..?: அமைச்சர் விளக்கம்..!

பொங்கல் பரிசாக வழங்கப்படும் 1000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுமா அல்லது கைகளில் வழங்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இந்தத் திட்டத்தை ஜனவரி 9-ம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், முழு கரும்பு ஒன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பரிசு விநியோகம் செய்வதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

இதனிடையே, பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம் நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கியில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசு 1000 ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை. திட்டமிட்டபடி ரேஷன் கடைகளிலேயே பெற்றுக் கொள்ளலாம்” என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like