1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டுநர்களே, ரூ.1000 அபராதம்.. லைசென்ஸ் ரத்து.. அரசு அதிரடி உத்தரவு..!

வாகன ஓட்டுநர்களே, ரூ.1000 அபராதம்.. லைசென்ஸ் ரத்து.. அரசு அதிரடி உத்தரவு..!

இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி சுற்றுலா தலமாக இருப்பதால் வெளியூரில் இருந்து ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலேயே வருகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ஹெல்மெட் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்காகவே ஹெல்மெட் குறித்து மக்களிடம் தொடர் விழிப்புணர்வை புதுச்சேரி காவல் துறை செய்து வருகிறது.


அந்த வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, "இருசக்கர வாகனங்களில் செல்வோர் தாமாகவே முன்வந்து ஹெல்மெட் அணிய வேண்டும்" என, புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் மாறன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதத்துடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like