சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும்..!
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், 3 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வடசென்னைப் பகுதியை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கிறார். அந்த வகையில் சென்னைப் பெருநகரத்தினுடைய அளப்பரியாப் பணிக்காக தினந்தோறும் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்து, அப்பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, இந்த மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.