நாளை வெளியாகிறது பெண்களுக்கான ரூ.1,000 அறிவிப்பு!?

நாளை வெளியாகிறது பெண்களுக்கான ரூ.1,000 அறிவிப்பு!?
X

பெண்களுக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பது பெண்களுக்கான உரிமைத் தொகை 1000 ரூபாய்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலான நிலையில், அதற்கான அறிவிப்பு இன்னும்வரவில்லை.
எனவே அரசியல் தலைவர்கள் இதுகுறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கம் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் நாளை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினருக்கான முக்கிய அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it