இது புதுசா இருக்கே..!! மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்காத பள்ளி மாணவர்களுக்கு ரூ.100 அபராதம்..!!
பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும், மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி இம்மாதத்தில் 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளது. இதுவரை ஒலிபரப்பான உரைகளில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் மொழி தொடர்பாக மிக அதிகளவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் ஆழம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க இந்த தளத்தை பிரதமர் அதிகம் பயன்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் ஜிஆர்டி நிரஞ்சன்பூர் அகாடமியில், பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. மாணர்களுக்கான பள்ளியின் வாட்ஸ் அப் குரூப்பில் அபராதத்திற்கான இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி, 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.