1. Home
  2. தமிழ்நாடு

மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு!!

மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு!!

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியில் இயங்கிவரும் ராமகிருஷ்ணாபுரம் குருகுல பள்ளியில் மாணவர்கள் சிக்கனும், கத்தரிக்காயும் சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து முதலில் சுமார் 50 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.

அவர்களைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு மேலும் 50 மாணவர்களுக்கு அதே போன்று வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அச்சம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு!!

தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களால் கண்காணிக்கப்படுகின்றனர். விசாரணையில் உணவு ஒவ்வாமை மற்றும் அஜீரணக் கோளாறு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒரே நேரத்தில் 100 மாணவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், முழு ஆய்வறிக்கை வந்த பிறகே பள்ளி நிர்வாகத்தினர் காரணம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.

பள்ளியில் ஒரே நேரத்தில் 100 மாணவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like