1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 10ம் வகுப்பு சான்றிதழ் பெறும் தேதி வெளியானது..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 10ம் வகுப்பு சான்றிதழ் பெறும் தேதி வெளியானது..!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 14-ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.


தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ - மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்நிலையில், துணைத் தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல் முடிவு வெளியான நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மாணவ - மாணவியர் தாங்கள் படித்த பள்ளிகளில் வரும் 14-ம் தேதி காலை 10 மணி முதல் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் சான்றிதழ்களை பெறலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like