1. Home
  2. தமிழ்நாடு

மின் கம்பியில் தொங்கிய விமானம்.. இருளில் மூழ்கியது 1 லட்சம் வீடுகள் உள்ள நகரம்..!

மின் கம்பியில் தொங்கிய விமானம்.. இருளில் மூழ்கியது 1 லட்சம் வீடுகள் உள்ள நகரம்..!

அமெரிக்காவில் நேற்று இரவு, 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மின் கம்பியில் மோதி அந்தரத்தில் சிக்கிக்கொண்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ள நகரம் இருளில் மூழ்கியது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் மொவ்ண்ட்கொமெரி என்ற நகரம் உள்ளது. இந்த நகரின் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன.


இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது நேற்று இரவு 2 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மோதி அந்தரத்தில் தொங்கியது. விமானம் மோதியதால் மின் இணைப்பு தடைபட்டது. இதனால், 1 லட்சம் வீடுகள், தொழில்நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டது.

இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பி மீது மோதி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த விமானத்தில் சிக்கிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும், விமானம் மோதியதால் இருளில் மூழ்கிய நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like