டான்செட் நுழைவுத் தேர்வு.. வரும் 1ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் 2023ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, எம்இ, எம்டெக், எம்.பிளான்., எம்.ஆர்க். ஆகிய முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
ஆனால், நடப்பாண்டு அதை மாற்றி, எம்.இ. உட்பட முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்காக புதிய தேர்வு முறையை அண்ணா பல்கலை. அமல்படுத்தியுள்ளது. அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (சிஇஇடிஏ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிஇஇடிஏ தேர்வு மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரு தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் www.tancet.annauniv.edu என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 1 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.