1. Home
  2. தமிழ்நாடு

பெண்ணின் மேலாடையை கழற்றி சோதனை?

பெண்ணின் மேலாடையை கழற்றி சோதனை?

விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின் போது தனது சட்டையை கழற்றச் சொல்லி அவமானப்படுத்தியதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இசைக்கலைஞர் ஒருவர் வேறு ஊருக்கு செல்வதற்காக பெங்களூரு விமான நிலையம் வந்துள்ளார். அப்போது பொருட்கள் மற்றும் பாதுகாப்பு சோதனை நடந்துள்ளது.

பொருட்களை சோதனை செய்த பின், ஆட்களை சோதனை செய்யும் போது மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அதிகாரிகள் அந்த பெண்ணின் மேலாடையை கழற்ற சொல்லியுள்ளனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விமான நிலையம் குறித்தும் சிஐஎஸ்எஃப் செயல் குறித்தும் குற்றம் சாட்டி அப்பெண் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பு சோதனைகளை கடந்து செல்ல ஒரு பெண் ஏன் ஆடைகளை கழற்ற வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


பெண்ணின் மேலாடையை கழற்றி சோதனை?

பெங்களூரு, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, இது குறித்து விசாரித்து பின்னர், ஏற்பட்ட தொந்தரவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு சோதனைக்காக ஜாக்கெட், கோட் உள்ளிட்ட ஆடைகளை சோதனை செய்வது மட்டுமே வழக்கம். இது நடந்திருக்கக்கூடாது என்றும் பதில் கூறியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like