1. Home
  2. விளையாட்டு

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோதல்..!!


2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. சென்ற ஆண்டை போல் இந்தாண்டும் இரு அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ளதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு பெருகியுள்ளது.

இந்த போட்டித் தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.


Trending News

Latest News

You May Like