அரசு தேர்வு எழுத வயது குறைப்பு!!
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி 42 வயதை கடந்தவர்கள் TRB தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த தகுதி தேர்வை 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற விதி இருந்து வந்தது. இதற்கிடையில் பரவிய கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2 வருடங்களாக எவ்வித ஆசிரியர் தகுதித்தேர்வும் நடத்தப்படவில்லை.
அதனால் ஏராளமானோர் விண்ணப்பிக்கும் தகுதியை இழந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் கல்வி முடித்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021ஆம் ஆண்டு சிறப்பு அனுமதியாக ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 45 ஆக உயர்த்தப்பட்டது.
அதே போல இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு 50ஆக உயர்த்தப்பட்டது. இந்த வயது வரம்புகான சிறப்பு அனுமதி 2022 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதனால் இனி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பொது பிரிவில் 42 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
அதே போல இட ஒதுக்கீடு பிரிவில் 47 வயதை எட்டியவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2023 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
newstm.in