1. Home
  2. தமிழ்நாடு

பிளாஸ்டிக் கவரில் சமையல் எரிவாயு: ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மக்கள்..!

பிளாஸ்டிக் கவரில் சமையல் எரிவாயு: ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மக்கள்..!

கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் பாகிஸ்தானில் மக்கள் பிளாஸ்டிக் கவர்களில் சமையல் எரிவாயுவை நிரப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடன் மேல் கடன் வாங்கிய பாகிஸ்தான், நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்துடன் போராடுகிறது. விலைவாசி உயர்வுக்கு மத்தியில் மக்கள் வலுவான பிளாஸ்டிக் பேக்குகளில் சமையல் எரிவாயுவை நிரப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய்க்கு சிலிண்டர்கள் விற்பதால், 900 ரூபாய்க்கு விற்கும் பிளாஸ்டிக் பேக்குகளில் எரிவாயு நிலையங்களில் எரிவாயுவை நிரப்பி செல்வதாக கூறும் மக்கள், கம்ப்ரசர் வாயிலாக வீட்டில் பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள்.


இதற்கிடையே, எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் மக்கள் காயம் காரணமாக மருத்துவமனை வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Trending News

Latest News

You May Like