நாளை இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக நடத்தப்பட்டு வருவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். படுக இன மக்கள் தங்கள் தெய்வத்திற்கு சிறப்பு செய்யும் விதமாக ஹெத்தையம்மன் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடத்திவருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை நாளை ஜனவரி 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள். இந்த நிலையில், படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (4-1-2023) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் வெளியிட்ட அறிக்கையில், "ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், குறிப்பிட்ட பணியாளர்களோடு கருவூலம் மற்றும் சார் நிலைக் கருவூலங்கள் செயல்படும். இதற்கு பதிலாக வரும் 21-ம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.