1. Home
  2. தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அஜாகரதையால் ரயிலில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்!! பகீர் வீடியோ

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அஜாகரதையால் ரயிலில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்!! பகீர் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மெட்ரோ ரயில் பெண் ஒருவரை நடைமேடையின் நுனிக்கு இழுத்துச் சென்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று மாலை 4.10 மணியளவில் சாகலா ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் பெட்டியின் கதவுகளுக்கு இடையே ஆடை சிக்கிய நிலையில் பெண் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதை வீடியோவில் காணலாம். அருகில் நின்றிருந்த பயணி ஒருவர் காப்பாற்ற முயன்ற நிலையில், அது பலனளிக்காமல், அந்த பெண் ரயிலுடன் இழுத்துச் செல்லப்பட்டார்.


மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அஜாகரதையால் ரயிலில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண்!! பகீர் வீடியோ

ரயில் வேகம் வேகம் அதிகரித்து, அந்த பெண்ணை நடைமேடையின் தண்டவாளத்தின் முனைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

அந்த வீடியோவில், பயணிகளை காப்பாற்றவோ அல்லது ரயில் ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட சொல்லி தகவல் கொடுக்கவோ, ரயிலை நிறுத்தவோ ரயில் நிலையத்தில் காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் காட்டுக்கிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காயமடைந்த பெண் கவுரி குமாரி சாஹு என தெரியவந்தது, அவர் அந்தேரியில் உள்ள செவன் ஹில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மருத்துவ செலவுகளை மும்பை மெட்ரோ ஒன் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.



இதற்கிடையில், சாஹு மெட்ரோ ஒன் நிறுவனத்திற்கு எதிராக சாகலா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை விளக்கி தான் படுகாயம் அடைய காரணமான மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like