மக்களுக்கு ஷாக்..!! தங்கத்தை போல் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு கிடு கிடு உயர்வு..!!

மக்களுக்கு ஷாக்..!!  தங்கத்தை போல் முட்டை விலை  வரலாறு காணாத அளவுக்கு கிடு கிடு உயர்வு..!!
X

முட்டையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சாப்பிடுவது உண்டு .சிலருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் பிடிக்கும் .சிலருக்கு வேகவைத்து சாப்பிட்டால் பிடிக்கும் .இன்னும் சிலர் அதை ஹாப் பாயில் செய்து சாப்பிட்டால் பிடிக்கும் .சில எக்சர்சைஸ் மற்றும் ஜிம் போவோர் முட்டையை பச்சையாக சாப்பிடுவது உண்டு. சொல்ல போனால் முட்டை நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.அப்படிப்பட்ட முட்டையின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாளுக்கு நாள் முட்டையின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதன்படி 550 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்துது 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 40 ஆண்டு கால கோழிப்பண்ணை வரலாற்றில், இதுவே அதிகபட்ச முட்டை விலையாகும். இதற்கு முன் 2 முறை முட்டையின் அதிகபட்ச விலை 550 காசாக இருந்துள்ளது. முட்டையின் சில்லறை விற்பனை விலை ரூ.6.50 ஆக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலேசியாவுக்கு மட்டும் ஒரு மாதத்தில் சுமார் 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாதம் ஒன்றுக்கு சுமார் 10 கோடி முட்டைகள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதுஒருபுறம் இருக்க தமிழகம், கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி முட்டை விற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில் வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி இருப்பதால் அங்கும் முட்டையின் தேவை அதிகரித்து, அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பொதுமக்களிடம் நுகர்வு அதிகரிப்பு, தீவன விலை உயர்வு போன்றவையே முட்டை விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.


Next Story
Share it