ராஜஸ்தானில் ரயில் தடம் புரண்டது!...பதறிய பயணிகள்...
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி விரைவு ரயில் தடம் புரண்டது.
சூரியநகரி விரைவு பயணிகள் ரயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அதிகாலை 3.27 மணியளவில் ஜோத்பூர் மண்டலத்தின் ராஜ்கியவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே ரயில் தடம் புரண்டது.
இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வடமேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வடமேற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் ஜெய்ப்பூரில் உள்ள தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறையில் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
ரயில் திடீரென்று தடம் புரண்டதால், பயணிகள் அச்சத்தில் அலறி அடித்தனர். இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in