1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்..!!

மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்..!!

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.ஆனால் இலவச வேட்டி சேலை குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளதால் பொதுமக்களிடையே குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதை அடுத்து இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடக்கும் என, எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து பரபரப்பை எகிற விட்டுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.


மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்..!!



தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-11-2022 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகளின் தரத்தையும், சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டு உள்ளார்.இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் குறித்த செய்திகள் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது. இதைக்கூட பார்க்காமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் வழங்கியும், ஏற்கெனவே அதற்காக ரூ.487.92 கோடி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இத்திட்டத்துக்கு தேவையான வேட்டி, சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like