1. Home
  2. தமிழ்நாடு

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் முதலமைச்சர் கடிதம்....என்ன ஆச்சு?...

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் முதலமைச்சர் கடிதம்....என்ன ஆச்சு?...

சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.


நாட்டில் பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் ஆடம்பரம் என்றாகிவிட்டதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.


உச்சநீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் முதலமைச்சர் கடிதம்....என்ன ஆச்சு?...



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு பல்வேறு அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி இருக்கிறது என்றார். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த அடிப்படை உரிமைகள் தற்போது ஆடம்பரம் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது என்று கூறினார்.


அரசியல், சமூகம், மதம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயல்படுபவர்களுக்கு மட்டுமே இந்த அடிப்படை உரிமைகள் கிடைக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். சிறுபான்மையினரின் சமூக, அரசியல், பொருளாதார நிலை தற்போது பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.



உச்சநீதிமன்ற நீதிபதிக்கு முன்னாள் முதலமைச்சர் கடிதம்....என்ன ஆச்சு?...

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று மெகபூபா முக்தி குற்றம்சாட்டியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like