1. Home
  2. தமிழ்நாடு

யார் பெற்றது ஆண் குழந்தை..?: குழப்பத்தில் மருத்துவமனை..!

யார் பெற்றது ஆண் குழந்தை..?: குழப்பத்தில் மருத்துவமனை..!

தெலுங்கானா மாநிலம் மாஞ்செரி அரசு மருத்துவமனையில் பவானி மற்றும் மம்தா என 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 27-ம் தேதி இரவு இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு ஒருவருக்கு ஆண் குழந்தையும், மற்றொருவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது.

அவசர கதியில் குழந்தைகளை எடுத்துச் சென்று மருத்துவமனை ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது, யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை அவர்கள் பதிவு செய்ய மறந்து விட்டனர். சிகிச்சை முடிந்ததும், எந்த குழந்தையை யாரிடம் கொடுப்பது என்பது தெரியாமல் திணறினர்.


இது பற்றி குழந்தைகளின் தாயாரிடம் மருத்துவமனை ஊழியர்கள் கேட்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக 2 தாய்மார்களையும் அழைத்து உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது எனக் கேட்டுள்ளனர். அப்போது, 2 தாய்மார்களும் தங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறந்தது என உறுதியாக கூறினர்.

இதனால் குழப்பத்தின் உச்சத்திற்கே சென்ற மருத்துவமனை ஊழியர்கள் 2 குழந்தையையும் மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, ஆண் குழந்தையின் தாய் யார் என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

ஆண் குழந்தையின் தாய் யாரென்று தெரியாததால் 2 குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கவில்லை. மருத்துவமனையில் குழந்தைகளுக்கு உணவளித்து வருகின்றனர். குழந்தைகளின் தாய்மார்களும் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு காரணமான மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like