1. Home
  2. தமிழ்நாடு

ரிஷப் பண்ட் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து..!

ரிஷப் பண்ட் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து..!

ரிஷப் பண்ட்டின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார்.


டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது.


ரிஷப் பண்ட் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து..!



தற்போது டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் , கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானதை அறிந்து வேதனை அடைந்தேன், அவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like