1. Home
  2. தமிழ்நாடு

வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்தக் கூடாது: போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு..!

வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்தக் கூடாது: போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு..!

மதுக்கடைகள், மதுபான விடுதிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்தால், முறையான வாரண்ட் பெற்று தான் கலால்துறையினர் சோதனை நடத்த வேண்டும். வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்த அனுமதி இல்லை என்று கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் மதுபான விடுதி நடத்தி வருபவர் சுதர்சன் கவுடா. இவரது மதுபான விடுதி சட்டவிரோதமாக செயல்படுவதாகக் கூறி சமீபத்தில் கலால்துறை போலீசார் சோதனை நடத்தினர். சுதர்சன் கவுடாவின் மதுபான விடுதியில் சோதனை நடத்துவதற்கு, கோர்ட்டில் இருந்து போலீசார் எந்த ஒரு வாரண்டும் பெறவில்லை.


இதையடுத்து, வாரண்ட் இல்லாமல் தனது மதுபான விடுதியில் சோதனை நடத்திய கலால்துறை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக ஐகோர்ட்டில் சுதர்சன் கவுடா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மதுக்கடை, மதுபான விடுதிகளில் சோதனை நடத்துவதற்கு கலால்துறையினர் முறையான வாரண்ட் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. அது தற்போது மீறப்பட்டுள்ளது’ என்றார்.

இதையடுத்து, “மதுக்கடைகள், மதுபான விடுதிகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது தெரியவந்தால், முறையான வாரண்ட் பெற்று தான் கலால்துறையினர் சோதனை நடத்த வேண்டும். வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்த அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால், சோதனை நடத்தி ஆவணங்களை பரிசீலிக்கலாம். விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால், அங்கிருக்கும் பொருட்களை ஜப்தி கூட செய்யலாம்” என்று, நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடர் உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like