1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இனிப்பான செய்தி சொன்னார் முதல்வர்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இனிப்பான செய்தி சொன்னார் முதல்வர்..!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் துறையைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like