1. Home
  2. தமிழ்நாடு

நெகிழ்ச்சி சம்பவம்..!! ஐசியுவில் இருக்கும் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்..!

நெகிழ்ச்சி சம்பவம்..!! ஐசியுவில் இருக்கும் தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்..!

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் வசித்து வருபவர் லாலன் குமார். இவரது மனைவி பூனம் வர்மா. இந்த தம்பதிக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அவர் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்ட பூனம் வர்மா தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் சாந்தினி குமாரிக்கும், ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் ஐசியுவிலேயே பூனம் வர்மாவின் கண்முன்னே திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 2 மணி நேரத்திலேயே பூனம் வர்மா உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Trending News

Latest News

You May Like