1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயார்: முதலமைச்சர் உறுதி!...

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயார்: முதலமைச்சர் உறுதி!...

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பாரதிய ஜனதா தயாராகி வருகிறது என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.


கர்நாடகத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.


இதையடுத்து, அடுத்த மாதம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில், சட்டசபை தேர்தல் குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்.


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயார்: முதலமைச்சர் உறுதி!...



அப்போது, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பாரதிய ஜனதா தயாராகி வருகிறது என்றார். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று கூறினார். தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றார்.


முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பாரதிய ஜனதா தலைமையும் எந்த விதமான ஆலோசனையும் நடத்தவில்லை என்றார். எனது தலைமையிலான அரசு முழுமையாக நிறைவு செய்யும் என்று பொம்மை கூறியுள்ளார். பாரதிய ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சாதனைகள், வளர்ச்சி பணிகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பாஜக தயார்: முதலமைச்சர் உறுதி!...



இதன்மூலம் மக்களின் ஆதரவை பெற தேவையான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருகிறோம் என்று பசவராஜ் தெரிவித்துள்ளார். காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகமாக உள்ளது என்று கூறிய அவர், தலைவர்கள் மோதிக் கொள்வதால் தொண்டர்கள் சண்டை போட்டுக் கொள்ளவதாக விமரிசித்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like