1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு ஒர் நற்செய்தி..!! இலவச ரேஷன் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!!

மக்களுக்கு ஒர் நற்செய்தி..!! இலவச ரேஷன் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!!

2020-ல் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமானபோது மார்ச் மாதம் பொது முடக்கத்தை அரசு அமல்படுத்தியது. அப்போது முதல் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு மாதம்தோறும் ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.


மக்களுக்கு ஒர் நற்செய்தி..!! இலவச ரேஷன் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!!

தற்போது வரை இந்த இலவச உணவு தானிய விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை முடிந்துள்ள 7 கட்ட திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.3.9 லட்சம் கோடியை செலவழித்துள்ளது. வரும் 2023 மார்ச் வரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு இன்னும் ரூ.40 ஆயிரம் கோடி தேவைப்படும்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, இந்த பிரதமர் ஏழை நலன் ரேஷன் திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டு வரும் டிசம்பர் 2023 வரை இலவச உணவு தானியம் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் சுமார் 81.3 கோடி மக்கள் இலவச உணவு தானியம் பெறுவார்கள். இதற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு திட்டத்தின் பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு புத்தாண்டு பண்டிகை காலத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Trending News

Latest News

You May Like