1. Home
  2. தமிழ்நாடு

நயன்தாராவின் படத்தை இணையத்தில் வெளியிட தடை!!

நயன்தாராவின் படத்தை இணையத்தில் வெளியிட தடை!!

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில், சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ளனர்.

99 நிமிடங்கள் ஓடும் இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழு அறிவித்தது. ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இடைவேளையுடன் திரையிடப்படுகிறது.

இந்நிலையில், படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக் கோரி விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.


நயன்தாராவின் படத்தை இணையத்தில் வெளியிட தடை!!

2634 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க, 29 இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

பட நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், கனெக்ட் திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரைத்துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சட்டவிரோத வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.


நயன்தாராவின் படத்தை இணையத்தில் வெளியிட தடை!!

இதை ஏற்ற நீதிபதி, கனெக்ட் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 2634 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கும்படி, 29 இணைய தள சேவை நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like