1. Home
  2. தமிழ்நாடு

எங்கேயும் காதல்: பட்டமளிப்பு விழாவில் காதலை தெரிவித்த மாணவர்..!!

எங்கேயும் காதல்: பட்டமளிப்பு விழாவில் காதலை தெரிவித்த மாணவர்..!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மவுண்ட் ப்ளெசண்டில் பகுதியில் மத்திய மிச்சிகன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மானவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில், முதுகலை பட்டம் பெற்ற டேவிட் யாரும் எதிர்பாரா வண்ணம் மேடையில் முழங்காலிட்டு தனது காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை தெரிவித்தார்.

எங்கேயும் காதல்: பட்டமளிப்பு விழாவில் காதலை தெரிவித்த மாணவர்..!!

டேவிட்டின் இந்த செயலை கண்ட அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைதட்டி உற்சாகமூட்டி மகிழ்ந்தனர். கடந்த 17-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோவை மத்திய மிச்சிகன் பல்கலைகழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா என்பதால் இதுபோன்ற நிகழ்வுகளை பெற்றோர் முதல் அனைவரும் கைதட்டி உற்சாகமூட்டி மகிழுந்துள்ளனர். இதுவே நம் நாடாக இருந்திருந்தால், பொதுவெளி என்று கூட பார்க்காமல் குடும்பத்தினர் மேடையேறி வந்து இளைஞரை குமுறியிருப்பர் என்பதே மறுக்க முடியாத உண்மை.



Trending News

Latest News

You May Like