1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்!!

சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்!!

சபரிமலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மண்டல பூஜைக்காக பல்வேறு துறைகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நடைபெற்றது. சன்னிதான அதிகாரி விஷ்ணுராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தருவது என முடிவு செய்யப்பட்டது.

மண்டல பூஜையையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் முன் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. பல்வேறு மொழிகளில் பக்தர்களுக்கு அறிவுரை மற்றும் பின் பற்ற வேண்டிய அறிவிப்புகள் இடைவிடாமல் ஒலி பெருக்கி மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்!!

சரணபாதையில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் வசதிகள் அமைத்து உள்ளன. தற்போது பெரிய நடைபந்தல் பகுதியில் பெண்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் சிறுவர்கள் , குழந்தைகளுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் உணவு பாதுகாப்பு துறையின் சோதனையை கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக படுத்து தங்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலோசனை கூட்டதில் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like