1. Home
  2. தமிழ்நாடு

கிறிஸ்துமஸ்: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!...

கிறிஸ்துமஸ்: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!...

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது


பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை ,தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது.


கிறிஸ்துமஸ்: தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!...



வரும் டிசம்பர் 23 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்கிறது.


இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like