1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்களை கவர தனியார் திரையரங்கு ஊழியர்கள் செய்த செயலை பாருங்க..!!

ரசிகர்களை கவர தனியார் திரையரங்கு ஊழியர்கள் செய்த செயலை பாருங்க..!!

2009-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் 'அவதார்'. உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த சயின்ஸ்-பிக்சன் படமான அவதார் உலகின் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகமான 'அவதார்-த வே ஆப் வாட்டர்' கடந்த 16-ம் தேதி வெளியானது.

உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான அவதார் 2 தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 41 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.


ரசிகர்களை கவர தனியார் திரையரங்கு ஊழியர்கள் செய்த செயலை பாருங்க..!!

இந்நிலையில் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் புதுவை கடலூர் சாலை வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்கள் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் வேடமணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். மேலும் அவதார் போல் வேடமணிந்து வரவேற்ற ஊழியர்களுடன் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதுவையிலும் அவதார் திரைப்படம் சில தியேட்டர்களில் வெளியான நிலையில், புதுவை - கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றிலும் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களை கவரும் வகையில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவதார் போல் வேடம் அணிந்துள்ள தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.




Trending News

Latest News

You May Like