1. Home
  2. தமிழ்நாடு

சீனா அத்துமீறலா?.. என்ன சொல்கிறார் ராணுவ தளபதி?

சீனா அத்துமீறலா?.. என்ன சொல்கிறார் ராணுவ தளபதி?

டோக்லாம் பகுதியில் சீனா புதிதாக எதையும் கட்டவில்லை என்று கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி ஆர்.பி.கலிடா, நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் சீனா கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறதா? என்று கேட்கப்பட்டது.


சீனா அத்துமீறலா?.. என்ன சொல்கிறார் ராணுவ தளபதி?


அதற்கு , கடந்த 2017-ம் ஆண்டு அப்பகுதியில் சீனா சாலை அமைத்ததால், பிரச்சினை ஏற்பட்டது என்றார். 73 நாட்களாக இருநாட்டு படைகளிடையே மோதல் நிலவியது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்சினை தீர்க்கப்பட்டது என்று கூறினார்.


தற்போது, டோக்லாம் பகுதியில் இந்தியாவோ, சீனாவோ எந்த உள்கட்டமைப்பு பணிகளிலும் ஈடுபடவில்லை என்று கலிடா உறுதிப்படத் தெரிவித்துள்ளார். ஏதேனும் பிரச்சினை எழுந்தாலும், உள்ளூர் மட்டத்தில் தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like