1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இனிமேல் இந்த திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு..!!

மக்களே இனிமேல் இந்த திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரசின் பல்வேறு வகையான நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசின் நிதித்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன்படி தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA)-க்கு துணை அங்கீகார பயனர் முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் மூலம் பல்வேறு வகையான மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like