1. Home
  2. தமிழ்நாடு

ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்.!

ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்.!

ஆவின் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்தி இருப்பதற்கு பாஜக வன்மையாக கண்டிப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு என்று சாடியுள்ளார்.


இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார். தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு? என்று அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like