1. Home
  2. தமிழ்நாடு

பள்ளிப்பாடப் புத்தகத்தில் அதிகரிக்கும் திருக்குறள்...அரசு நடவடிக்கை!

பள்ளிப்பாடப் புத்தகத்தில் அதிகரிக்கும் திருக்குறள்...அரசு நடவடிக்கை!

திருக்குறள் பாடப்பகுதிகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு மீண்டும் பாடநூல் கழகத்திடம் ஒப்படைப்பதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக பகுதிகளை இடம்பெற செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிப்பதன் மூலம் ஒழுக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை என்றும் மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

பள்ளிப்பாடப் புத்தகத்தில் அதிகரிக்கும் திருக்குறள்...அரசு நடவடிக்கை!

இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்கு 10-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகங்கள் அச்சடிப்பதற்கான குறுந்தகடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கியிருந்த நிலையில், அவை திரும்ப பெறப்பட்டுள்ளன.

பள்ளிப்பாடப் புத்தகத்தில் அதிகரிக்கும் திருக்குறள்...அரசு நடவடிக்கை!

திருக்குறள் பாடப்பகுதிகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு மீண்டும் பாடநூல் கழகத்திடம் ஒப்படைப்பதற்கு கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதே போன்று பொதுத்தேர்வுகளிலும் திருக்குறள் சார்ந்த கேள்விகள் மிக அதிக அளவில் இடம்பெற உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like