1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா?..உயர்நீதிமன்றம் அதிரடி

ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா?..உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். எனவே அந்த பதவியானது ஒரு ஆதாயம் தரக்கூடிய பதவி என்று குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் சாசனப்படி ஆளுநராக பதவி வகிப்பவர் இதுபோன்று ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் வகிக்கக்கூடாது. எனவே ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பெறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என். ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதி இழப்பு ஆகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா?..உயர்நீதிமன்றம் அதிரடி



இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு வாதங்கனை முன்வைத்தார்.


ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா?..உயர்நீதிமன்றம் அதிரடி



அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா, இல்லையா என்பது குறித்த தீர்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like