1. Home
  2. தமிழ்நாடு

விஜய் டிவி பிரபலம் சற்று முன் காலமானார்..!

விஜய் டிவி பிரபலம் சற்று முன் காலமானார்..!

'மெளனராகம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்', 'ஈரமான ரோஜாவே 2' ஆகிய சீரியல்களை இயக்கிய தாய் செல்வம் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கடந்த 2009-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'நியூட்டனின் 3-ம் விதி' படத்தை இயக்கியவர் தாய் செல்வம். அத்துடன் அவர் பல்வேறு சின்னத்திரை சீரியல்களையும் இயக்கி பிரபலமடைந்தவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், 'மௌனராகம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களை இயக்கியவர். தற்போது அவர், 'ஈரமான ரோஜாவே 2' என்ற தொடரை இயக்கி வருகிறார். இந்நிலையில், இயக்குநர் தாய் செல்வம் இன்று காலமானார். அவருடைய இறப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இது குறித்து விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், 'உங்களுடைய படைப்புகள் என்றும் எங்கள் மனதில்' எனப் பதிவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like