1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி! பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு!!

அதிர்ச்சி! பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு!!

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய விவகாரம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு டெல்லியின் உத்தம்நகர் மோகன் கார்டன் பகுதியில் 17 வயது பள்ளி மாணவி தனது தங்கையுடன் நடந்து சென்றார். அப்போது ஒரு பைக்கில் வந்த இருவரில் ஒருவர், சிறுமியின் முகத்தில் திடீரென ஆசிட்டை வீசினார்.

மாணவி வலியில் அலறித்துடித்தார். அவரது தங்கை அருகே உள்ள தங்கள் வீட்டுக்கு ஓடிச்சென்று தந்தையிடம் தகவல் தெரிவித்தார். உடனே அவர் விரைந்து சென்று மகளை சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர்.


அதிர்ச்சி! பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு!!

ஆசிட் வீச்சில் மாணவிக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டன. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆசிட் வீசியவர்கள் யாராக இருக்கக்கூடும் என்ற தகவலை போலீசாரிடம் மாணவி தெரிவித்தார். அதன் அடிப்படையிலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் மூலமும், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like